எம் பொண்ணுப் பேரு மந்தியா

வாடா முத்தரசா. நல்ல இருக்கறயா?
😊😊😊😊😊
நான் நல்லா இருக்கிறேன் பாட்டி. பொன்னி எங்க போயிட்டா?
😊😊😊😊😊
பொன்னி இங்க வாடி. எந்த நேரமும் ஊட்டுலயே அடஞ்சு கெடக்கிறா பிரசவ விடுமுறையில. பொண்ணுப் பொறந்து ஒரு மாசம் ஆகப்போகுது.
😊😊😊😊😊
வாங்க, வாங்க. உங்க பொண்ணுக்கு துபாயிலிருந்து என்னேன்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க?
😊😊😊😊😊
பெட்ரோலும் டீசலும் வாங்கிட்டு வந்திருக்கிறேன்.
😊😊😊😊😊
நம்ம பொண்ணுப் பொறந்த செய்தி கேட்டு ஒரு மாசம் கழிச்சு வந்திருக்கிறீங்க. ஆசையா பேசுவிங்கனு பாத்த எரிஞ்சு விழறீங்களே.
😊😊😊😊
எரிஞ்சு விழாம உன்னக் கொஞ்சச் சொல்லறீயா? பாப்பாவுக்கு என்னமோ பேரு வச்சு அந்தப் பேர நகராட்சில பதிவு பண்ணீட்டாதச் சொன்னியே அந்தப் பேரச் சொல்லு.
😊😊😊😊😊
அய்யோ கோபப்படாதீங்க. எங்க அப்பா நம்ம நகரத்தில பெரிய சோதிடர். அப்பறம் எண் கணித சோதிடர் ஏகாம்பரம் நாடி சோதிடர் நாகமுத்து. இவுங்க மூணுபேரும் ஆலோசனை பண்ணி நம்ம பாப்பா
வருங்காலத்தில உலகம் போற்றும் சிந்தனையாளியா வருவான்னு மூணெழுத்துப் பேர வைக்க முடிவு பண்ணினாங்க. 'சிந்திக்கிற, ஆழ்ந்து சிந்திக்கிற' என்ற அர்த்தமுள்ள இந்திப் பேரை ஒரு வாரமாத் தேடி கடைசில 'மந்தி'-ங்கற மூணெழுத்துப் பேரக் கண்டுபிடிச்சாங்க. பெண்கள்ல பெரிய தத்துவஞானிங்க யாரும் இதுவரை உருவாகுல. நம்ம பொண்ணுக்கு அந்த பாக்கியம் கெடைக்கப் போகுதுங்க.
😊😊😊😊
மந்தியாம், மந்தி? தமிழாசிரியரா இருக்கிற உனக்கு தமிழ்ல இருக்கிற சொல் 'மந்தி'க்கு அர்த்தம் தெரியுமா?
😊😊😊😊😊
எதோ கேள்விப்பட்ட மாதிரி இருக்குதுங்க.
😊😊😊😊😊
ஏண்டி வேதியியல் படிச்ச எனக்கே திரிகூட ராசப்பகவிராயர் எழுதின 'வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும்' -ங்கற பாடல் ஞாபகத்துக்கு வருது. உனக்கு 'மந்தி'க்கு அர்த்தம் தெரிலீயா? 'மந்தி'-ன்னா 'பெண் குரங்கு' -ன்னு அர்த்தம். நமக்கு பொறந்த தேவதையப் பெண் குரங்கா மாத்திட்டயே.
😊😊😊😊😊😊
இருந்துட்டுப் போகுதுங்க. எல்லோருக்கும் இந்த 'பெண் குரங்கு' அர்த்தம் தெரியப் போறதில்ல. நம்ம தமிழர்கள் யாரும் அவுங்க பிள்ளைங்களுக்கு தமிழ்ப் பேருங்கள வைக்கறதை அடியோட மறந்துட்டாங்க. நாம மட்டும் ஏந் தமிழ்ப் பேர வச்சு நம்ம கொழந்தைய அசிங்கப்படுத்தணும்? நீங்க தலைகீழா நின்னாலும் எஞ் செல்லம் மந்தி பேர மாத்தவிடமாட்டேன். நான் பிரபல சோதிடர் பெத்த பொண்ணுங்கறதை மறந்துடாதீங்க.
😊😊😊😊😊
நீ மந்தின்னு வச்சாலும் மாந்தின்னு வச்சாலும் அந்தப் பேரச் சொல்லி நம்ம தேவதைய நாங் கொஞ்சப் போறதில்ல. என்னப் பொறுத்தவரை நம்ம பாப்பா வெண்ணிலாதான்.
😊😊😊😊😊
????????????
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Manthi = thoughtful

எழுதியவர் : மலர் (13-Jul-18, 3:17 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 135

மேலே