செல்லச் சொப்பனமே...

உள்ளே உழுதிட்டு
விதைத்தவளே...
ஊறும் வேரின்
ஆழம் அறிந்திடவோ
நீ விழுதாய் வளர்ந்திட்டாய்...
வா...
வளரு...
தொடு...
துளை...
தூணாகு...
தூரத்தோண்டு...
திருகிச் செல்...
திறம்பட நில்...
திணறல் கொடு...
மென்னிதையம் தேடு...
மெல்லிசை உணர்...
மெய் மற...
மெல்லச் சுற்று ...
மிருதங்கம் இசைக்கும்...
மிருதுவாய் துளை...
மின்னலோடு நுழை...
மிரளாதே...
மீளாச் சொற்கம் புகும்
என் செல்லச் சொப்பனமே...
~*~

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 💐💐💐

எழுதியவர் : முத்தரசு மகாலிங்கம் (13-Jul-18, 6:44 pm)
பார்வை : 63

மேலே