தடை தாண்டி நட

மாறுபட்ட சூழல்..!!
மாற்றத்தக்க மாண்பு..!!
மாற்றத்திற்கேற்றாற்போல் மனதை பண்படுத்தும் பருவம்..!!
பார்த்த மாற்றத்திற்கும்
பார்க்கும் இடத்திற்கும் ஏற்றாற்போல்
பக்குவப்பட பழகும் குணம்..!!

முதல் நாள்..
முழுதும் தயக்கத்தில்
முழிக்கும் கண்களுடன்
முழங்கை பிடித்து துணிவு தரும் "சிலரின்" வார்த்தைகளின்றி..??
வாழ்த்துக்களின்றி..!!
முன்னுரை அறையில்
மூன்றாம் ஆளாய் அமர்ந்தேன்..!!
மூவரில் இருவர் (myself and another girl) ஒரே இடத்திலிருந்து வருபவர்கள்..!!
அவனவன் ஒரே ஊர்க்காரர்களை தெரிந்து வைத்திருப்பான்..!!
என் அடுத்த தெருகாரரை எனக்கு தெரியவில்லையே என வருந்தியபடி..!!
அவரின் அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில்களை அடுக்கிக்கொண்டிருந்தேன்..!!
எட்டுத்தொகையுடன்(totally 8 no.of peoples) இனிதாய் தொடங்கிற்று..!!

முன்னுரை அருமை..!!
ஆர்பாட்டமில்லாத
"யாரையும் மட்டம் தட்டாத"
ஆங்காங்கே தமிழ், மலையாளம், வடமொழி என பிற மொழிகளையும் தீண்டும் நகைச்சுவை கொண்ட ஆங்கிலத்தில்..!!

இரண்டு மணி நேரத்திற்கு பின்
கலந்துரையாடலை ஊக்குவிக்கும் வண்ணம்
படம் பார்த்து பக்குவம் பகிர செய்யும் பொழுதுபோக்கு..!!
நானா இது என என்னையே ஆச்சர்யமூட்டும் என் பங்களிப்பு..!!
மதிய உணவிற்கு பின்
முழுதும் பணியை பற்றிய பகிர்தல்..!!

அடுத்த நாள்..
குறிப்பிட்ட வண்ணத்தில் உடையணிய வேண்டும்..
மாலை அனைவருடனும் வரவேற்பு நிகழ்வு உள்ளது என தொலைப்பேசி வாயிலாக ஆணையிட்டதால் அதனை மதித்து நடந்தேன்..!!
காலையில் விரிவுரை..!!
மதியம் மடிக்கணினியுடன்(laptop) பணி தொடங்கியது..!!
மாலை நிகழ்வில்
எண்பதிலிருந்து நூறு நபர்களுடன் எண்குழு(number club),
பணியின் வரிசையை சரிவர விளக்கம் அளித்தல்(act like ordered activity of work flow),
ஒற்றுமைகள் கண்டறிதல்(find the similarities given by them in all) என பல விளையாட்டுகள்..!!
ஒருவரையொருவர் நன்கு அறியவும்
தயக்கமின்றி பேசவும் உதவியது..!!
வயதில் எத்தனை பெரியவராயினும் பெயரிட்டே அழைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் பழக தான் கடினமாக உள்ளது..!!
சிறுவயதிற்குபின்
தயக்கம் தவிர்த்து
விளையாடியது அன்றுதான்..!!
நேரம் கடந்தும்
இவர்கள் முடித்தபாடில்லை..!!
முடிய நாழியானது..(7pm)
பயணமும் நாழியானது..!!
புகலிடம்(home) வந்தடைந்தேன்(8.15pm)..!!

நான் வளர்ந்த இடத்திற்கும்(home,school)
நான் வாழும் இடத்திற்கும் இடையே
முடிவிலா மாற்றங்கள்..!!(office)
எண்ணற்ற அனுபவங்கள்..!!
எண்ணிலடங்கா எண்ணங்கள்..!!
எல்லாவற்றையும் கொட்டதான் நினைக்கிறேன்..!!
ஏனோ நீ எட்டி எட்டி உதைகிறாய்..!!

"மாற்றம் ஒன்றே மாறாதது"
என பலர் கூற கேட்டிருக்கிறேன்..!!
அனுபவரீதியில் உணர்வது
அருமையாக உள்ளது..!!

வானம் அழகு தான்..!!
வா வெளியே..!!
வாழ்க்கையில்
வலிகளைவிட
வழிகளே அதிகம் என உணர்ந்தேன்..!!

தடை..!!
அதை உடை..!!
புதுசரித்திரம் படை..!!
நாளை நமதே..
-என்ற பாடல் வரிகளை முனுமுனுத்தபடி..!!

எழுதியவர் : பகவதி லட்சுமி (14-Jul-18, 12:20 pm)
சேர்த்தது : பகவதி லட்சுமி
Tanglish : thadai thaanti nada
பார்வை : 200
மேலே