எங்கள் அரண்மனை

சின்னதா ஒரு கூரை வீடு
மனசு நெறஞ்ச சந்தோசம்
கொட்டிக்கிடக்கும் வீடெங்கும்

ஓரே ஒரு கட்டில்
அன்னை அருகே நான்
தூங்குவதா நீ தூங்குவதா என்று
அண்ணனுடன் போடும் சண்டை
இறுதியில் நானும் அண்ணனும்
கட்டிலில் உறங்க அப்பாவும் அம்மாவும் கீழயே தூங்குவாங்க
பொன்னான நாட்கள் அது

மாதம் ஒருமுறை தவறாது கொட்டும் தேள் உறக்கத்தை
கெடுத்துவிடும் சுண்ணாம்புதான்
அருமையான மருந்து

விளக்கு வெளிச்சத்துல படிச்சி
கொசுக்கு பயந்து கொசுவலையில
தூங்குன நாட்கள் என்று
நினைத்தாலும் இனிமையே

அம்மியில அரச்சி
மண்பானையில சமச்சி
அம்மா ஊட்டிவிட்ட சாதம்
அப்பா நெஞ்சியில படுத்து
உறங்கிய நாட்கள் அதெல்லாம்
சொர்க்கம் எனக்கும்
அண்ணனுக்கும்....

வீட்டுத்திண்ணயில ஊஞ்சல்
கட்டியாட ஆட ஆச -வேகமா ஆடுனா
கூரை விழுமோ என்று பயம்
இருந்தாலும் ஆடுவோம்

மழை வந்தா போதும்
தய்ய தக்கா தான்
கூரையை கிழித்துக்கொண்டு
அத்துமீறி நுழையும்
சொட்டு சொட்டா
வாளி நிரம்பும் இரவு முழுமையும்...

இருட்டா கெடந்தாலும்
வாழ்க்கை இருண்டதில்லை
வெளிச்சம் என்றோ ஓர் நாள்
பிறந்து தான ஆகனும்...

அரண்மனையில் வாழ்ந்தா கூட
இந்த சுகம் கிடைக்காது
தொலைத்த நாட்களை
மீட்டெடுப்பது நினைவுகளே
எங்கள் சொர்க்கம் அந்த
ஓல குடிசையில் நிறைந்து கிடந்தது

எழுதியவர் : சே.இனியன் (14-Jul-18, 2:16 pm)
Tanglish : engal aranmanai
பார்வை : 107

மேலே