மகிழ்விக்கும்

சேற்றில் பிறக்கும்
தாமரை
எழுந்து நின்று
வாழவைத்த குளத்துக்கு
அழகு சேர்த்து
அனைவரையும்
மகிழவைப்பதுபோல்

ஏழ்மையில் வாடும்
பள்ளி பிள்ளை
போடும் சீருடையால்
படிக்கும் பள்ளிக்கு
பெருமை சேர்த்து
பெற்றோரை
மகிழ்விக்கும்

எழுதியவர் : கோ. கணபதி. (15-Jul-18, 8:39 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 35

மேலே