வாழ்க்கையில் வீழ்ச்சி ஒரு தொடக்கம் மட்டுமே
ஒய்யாரமாய் ஓங்கி நின்ற
மரமே
உன் நிழலில்
சின்னஞ்சிறு செடிகளாய்
ஒய்வு எடுத்ததில்
நானும் ஒருவன்
புயல் , மழை ,
எது அசைந்தாலும்
அசைந்து
கொடுக்கவில்லை நீ ...
முயற்சிகள் கயவர்களுக்கும்
வெற்றி தானே
மெல்ல ஆணி வேரை
அசைத்து விட்ட
கயவர்களுக்கு
மெல்ல உன் புன்னகையை
புதைத்து விட்டனர்
விதையை புதைத்தது
உனக்கு மட்டும் வெளிச்சம்
உன் அருகில் இருந்தும்
குருடாகி போன என் கண்கள்
உன் விதைக்காவது
ஒளி கொடுக்கட்டும்
வாழ்க்கையில் வீழ்ச்சி
ஒரு தொடக்கம் மட்டுமே ..........