இயற்கையன்னை

வீறுகொண்ட மாமேனி
செந்நிற மேனியில்
வீற்றிருக்க
வீர மகள்
நாளும் போற்ற
வையம் போற்ற
வாழ்த்திடுமே உன் புகழை

நானிலம் நீ
நீரும் நீ
வானும் நீ
கண்ணீர் துளியும் நீயே!
கதிரவன் காதலியே
நிலவொளி தலைவியே
நீலநிற மேனியாலே!
பண்ணும் நீ
என்
பாட்டும் நீயே!

பாடும் கானம்
எல்லாம்
உன் தாள் பணிய
அன்னை உருவே
எங்கள் உயிரே
மன்னிப்பாயாக!

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (16-Jul-18, 1:26 pm)
பார்வை : 785

மேலே