இவை என்ன பாடல்கள் நானறியேனே
இன்றைய தமிழ்த் திரையில் அய்யகோ
என்னென்று சொல்வேன் ஏதோ பிதற்றல்கள்
ஏதேதோ வேற்றுமொழியில் தமிழ் சொற்களில்
கலக்கப்பட்டு மெட்டும் தரப்பட்டு காதல்
கீதமென்றும் அரங்கேற்றப்பட்டு மக்கள்
ஆதரவும் பெற்று வருவதைக் கண்டு
நெஞ்சம் வேதனைப்படுகிறதே கம்பன்
பாரதி போன்றோர் பாக்கள் கேட்டு
பழகிப்போன காதிற்கு வெந்த ஈயம்போல்
வந்து பாயுதே இவ் விபரீத 'பாக்கள்'.
இலக்கிய பாக்கள் ஏராளம் ஏராளம்
இன்னும் எழுதுவோரும் பலர் இருக்க
ஏன் இன்னும் இந்த விபரீத பாக்கள்.