விடியலே வா

விடியலே வா
புலர்ந்த விடியலில் வெளிச்சத்தை காணலையே
மாற்றுத்திறனாளி எனினும் வேட்டையாடும் மிருகங்களிடம் இருந்து
விலக்கிடும் விடியலை காணலையே விடியலே வா
துவண்டிடும் பெண்டிர் மனதை துடித்திட செய்யும் விடயலேவா
வெளிநாட்டு பறவையின் சிறகை முறித்த
போலிவேடம் கொண்டவனின் சுதந்திரம் பறிக்க விடியலே வா
பெண்ணை தொட நினைப்பவனின்
மூச்சை நிறுத்தும் வீச்சாய் விடியலே வா
சுதந்திரக்காற்றேஎனினும்
அதில் கலந்து வரும் துர்நாற்றம் போக்கும் விடியலே வா
போதும் இருட்டு போகட்டும் பயம்
வெளிச்சம் தரும் விடியலே வா

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (18-Jul-18, 10:38 am)
Tanglish : vidiyale vaa
பார்வை : 124

மேலே