🏃🏃வாரேன்டி🏃🏃

ஒரு இரயிலப் போல
தண்டவாளம் மேல
ஏறி வாரே......
ஒரு கூஸ்த்து வண்டி
அது மேல ஏறி
நா ஓடி வாரே.......

வாரேனே வாரேனே
உன்ன பாக்க வாரேனே......
போரேனே போரேனே
உன்ன பாத்து பேச போரேனே.....

உன்ன பாக்க வரும் ரோட்டுல
தடையேதும் வருமா புள்ள காடொன்னு வந்தா நா
கடந்து வாரே
மலையொன்னு நின்னா
நா தாண்டி வாரே
அடி கடலும் தா இருந்தாக்கா
நீந்தி வாரே........

பனிச்சிந்தும் ரோசாப்பூ
பரிசாக தரவா.....
நீ பல்லாங்குழி ஆட
பவளக் கல்ல தரவா
உனக்கு என்ன நானும் கொண்டுவர.....நீ கேட்டா அந்த
வானத்தையே சட்டைப் பையில்
அடைத்து வாரே.......
சிட்டெரும்பு திண்ணும்
ஒரு சக்கரகட்டி போல
உன்ன கொஞ்சம் கொஞ்சமா
நா திண்ண வாரே
நீ எட்டி நின்னு பாத்தாக் கூட
என் ஆயுசு கெட்டி புள்ள.....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (18-Jul-18, 12:03 pm)
பார்வை : 71

மேலே