புன்னகை வரம்

தன் வார்த்தை வரவுக்காய்
உன் வழித்தடம் பார்த்து
தவமாய்த் தவம் கிடக்கிறது
என் கவிதை
ஓர் புன்னகை வரம் கேட்டு,
உன் இதழ்களில் அரும்பும்
சிவப்பு ரோஜா மொட்டுக்கள்
என் வார்த்தைகளில்
வந்து இங்கு பூத்து விட்டால்
உரம் இழந்து வறண்டு கிடக்கும்
என் வரிகளும் மூத்து விடும்
என் கவிதையும்
தன்னை யாத்து விடும்

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (18-Jul-18, 11:22 am)
Tanglish : punnakai varam
பார்வை : 121

மேலே