குளிர்க்காயனும்
அந்தி வானில்
தோன்றும் நிலா
தேனில் தோய்ந்திட வேணும்
அக்கம் பக்கம் ஆளே இல்லா
தனிமை தவழ்ந்திட வேணும்
காற்றில் பனி ஈரம்
பரவிட வேணும் அதுவும் இதமாக
வீசிட வேணும்
இப்படியே இரவோ இருநூறு
ஆண்டுகள் நீண்டிட வேணும்
புயலுக்கே பதிலடி கொடுக்கும்
அணையாத தீ மூட்டி
நீயும் நானும் குளிர்க்காயனும்
காதல் தீயில் சரிபாதியாய்
வேகணும் என் காயத்துக்கு
மருந்து நீயாகணும்
உன் காயத்துக்கு மருந்து
நானாகனும்
இந்த நிலை மாறுமானால்
நீ என் மடி சாய்ந்தே
நான் உன் மடி சாய்ந்தே
நம் உயிர் போகணும்.......!!!