உனக்காக வழிமேல் விழிவைத்து 555

என்னவளே...

எப்போதும் நான்
நானாகவே இருந்தேன்...

உன்னை பார்த்த நிமிடத்தில்
என்னை நான் இழந்தேன்...

உன் நீண்ட பிரிவு என் இதயத்தை
நொறுக்கிவிடுமோ அச்சத்தில் நான்...

உனக்காக என்னை
நான் மாற்றியதில்லை...

எப்போதாவது உன்னை
நான் நினைப்பேன்...

தினம் உன் முகம்
பார்த்தபோது...

இந்த பிரிவில்
எப்போதாவதுதான்...

உன்னை நான்
நினைக்காமல் இருக்கிறேன்...

உனக்காக நான் கண்ணாடிமுன்
நேரம் ஒதுக்கியதில்லை...

இப்போது அதிகநேரம்
கண்ணாடிமுன் பேசிக்கொள்கிறேன்...

கைபேசியை
எப்போதாவது நான் பார்ப்பேன்...

பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
இப்போதெல்லாம்...

உன் அழைப்பிற்காக மட்டும்...

முழுவதுமாக உனக்காக
நான் வழிமேல் விழிவைத்து.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (18-Jul-18, 3:35 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 926

மேலே