தவமாய் பிறந்த தாயின் செய்கை ரசிப்பு

தமிழினி அழுகிறாள்
தவழ்ந்து
விளையாடத் துடிக்கிறாள்,
நடந்து நடனமாட
மகிழ்ந்து கொள்கிறாள்,
இடையிடையே தரையை
முத்தமிட்டு,
தன்னைத் தனக்கே
அடையாளப்படுத்தி,
தன்னம்பிக்கையைத் தூண்டி
மீண்டும் எழுகிறாள்,
அவள் இசைந்துகொண்டே
உலவும் கூண்டுக்குள்ளே,
பரணி கலம்பகம் அவள்
நாவுக்குள்ளே நாட்டியமாட,
நடராசர்
அவளின் அடிமையாகி
வேடிக்கையும் பார்க்க,
உலாவிக்கொண்டே
அவள்தன்
பாதத்தூரிகை கொண்டிட்ட சித்திரங்களின்
பிரமிப்பில் சிலிர்க்கிறது சுவரோவியமொன்று!!