அழகே வா அருகே வா

செல்லம் கொஞ்சும் மழலைபோல்
செங்கனி இதழால் கதைக்கின்றாள்
மெல்ல வீசும் தென்றல்போல்
மேனியைத் தழுவி வதைக்கின்றாள்
அல்லும் பகலும் அவள்விழியால்
ஆசையை நெஞ்சில் விதைக்கின்றாள்
கல்லில் வடித்த சிலைவடிவாய்
கருத்தைக் கவர்ந்தெனைச் சிதைக்கின்றாள்
அஷ்றப் அலி