புல்லுகிட்டப் பாத்தீங்களா

ஏண்டா கண்ணையா, புல்லுக்கிட்டப் பாத்தீங்களா?
😊😊😊😊😊
என்ன சொல்லறீங்க பாட்டிம்மா?
😊😊😊😊
புல்லுக்கிட்டுடா கண்ணையா.
😊😊😊😊
புல்லுக்கிட்டா. ஓ....அதுவா?
நான் உங்க வயக்காட்டு வழியாத்தான் வர்றேன். உங்க வயல் வரப்பில கட்டி வச்சிருந்த ரண்டு புல்லுக்கட்டுங்களப் பாத்தேன். யாரோ உங்க மாடுகளுக்குப் போட புல்லை அறுத்துக் கட்டி வச்சிருந்தாங்க.
😊😊😊😊
அடே கண்ணையா, நான் புல்லுக்கட்டைத் கேக்கலடா. கல்லுக்கத்தாவிலிருந்து வந்திருக்கிற எம் பேரன் புல்லுக்கிட்டப் பாத்தீங்களா?
😊😊😊😊
ஓ... அந்தச் சுருட்டை முடியுள்ள உங்க பேரனா? அவம் பேரு புல்கிட். நான் அவனப் பாக்களீங்க பெரியம்மா.
😊😊😊😊
இந்த இந்திப் பேருங்கள என்னால சரியாவே சொல்லமுடிலடா கண்ணையா. இந்தப் புல்லுக்கிட்டுப் பையன் எங்க போனானோ? நானும் அரை மணி நேரமா தேடறேன்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Pulkit = happy, thrilled, overjoyed.

எழுதியவர் : மலர் (22-Jul-18, 9:30 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 151

சிறந்த நகைச்சுவைகள்

மேலே