மருத்துவப் பேரா
அடியே பொன்மணி, அங்க போறாளே அந்த குண்டுப் பொண்ணு யாரடி?
😊😊😊😊😊
அவ நம்ம ஊருக்கு புதுசா வந்திருக்கிறா. எங்க பக்கத்து வீட்டுக்கு உறவுக்காரப் பொண்ணு.
😊😊😊😊
அவ பேரு என்னடி பொன்மணி?
😊😊😊😊
அவ பேரு கனிஷ்கா.
😊😊😊😊
கனிசுக்கா. கனின்னா பழம். காய வச்ச இஞ்சி சுக்கு. அவ பேரு மருத்துவப் பேரா இருக்குதே.
😊😊😊😊
கனிசுக்க இல்லங்க பெரியம்மா. கனிஷ்கா. இந்திப் பேரு. அதுக்கு அர்த்தம் (small) 'சின்ன' ' சிறிய'.
😊😊😊😊
'சின்னப் பொண்ணு'ன்னு பேரு வச்சாக்கூட ஒரு அர்த்தம் இருக்குது.
என்னடி இந்திப் பேருங்க 'சின்ன' , 'சிறிய', 'பெரிய', 'உயர்ந்த', 'குள்ளமான'ன்னெல்லாம் பேரு வச்சுக்கிறதா?
😊😊😊😊😊
பெரியம்மா இந்திக்காரங்க பெரும்பாலானவங்க பேரு பெயரடைகளாகத் (Adjectives) தான் இருக்குது.
😊😊😊😊
அப்பிடியா. நம்ம தமிழ் சனங்களும் அந்த மாதிரி பேருங்களத்தானே விரும்பி அவுங்க குழுந்தைங்களுக்கு வச்சுக்கிறாங்க.
😊😊😊😊
அது உண்மைதாங்க பெரியம்மா.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க. நல்ல தமிழ்ப் பெயர்களுக்குப் பஞ்சமில்லை.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆