திரைப் பட்டாணி
பல்லுப் போனா சொல்லுப் போச்சுன்னு சொல்லுவாங்க. எம்பது வயசிலயும் எம் பல்லு பளப்பளனு இருக்குது. பட்டாணி வாங்கிட்டு வரச் சொன்னேனே மறந்துபோயிட்டயாடா மணி.
😊😊😊😊
பாட்டிம்மா அந்தத் தொலைக் காட்சிப் பெட்டியப் பாருங்க.
😊😊😊😊
அதில ஒரு அழகான பொண்ணு தெரியுது. அதுக்கென்ன?
😊😊😊😊
அது தான் பட்டாணி.
😊😊😊
என்னடா சொல்லற?
😊😊😊😊
அது தான் பட்டாணி. வெறும் பட்டாணி இல்ல. திஷா பட்டாணி.
😊😊😊😊
ஏன்டா நாங் கேட்ட பட்டாணி கடைல விக்கறது. நீ இந்தப் பொண்ணக் காட்டி என்னமோ பட்டாணின்னு சொல்லற.
😊😊😊😊
பாட்டிம்மா இவுங்க ஒரு இந்தி நடிகை. தற்செயல நான் பாக்கறபோது இந்தப் பட்டாணி பொண்ணு வந்துச்சு. இன்னிக்கு கடையடைப்பு. பட்டாணிக் கடை தெறக்கல. இந்தத் திரைப் பட்டாணி அழகைப் பாத்து ரசிங்க.
😊😊😊😊
அட போடா இவனே...