நீ இல்லா நேரத்தில்

அன்பே!
நீ இல்லா நேரத்தில்
என் வானம் கரையும்
நிலவும் தேயும்
பகலும் இரவாகிப் போகும்
கண்ணும் கண்ணீர் பட்டு பட்டு
பாழாய்ப் போகும்
கானவும் நோயுற்று சாகும்
என் உயிரின் ஜீவன் அத்துப்போகும் நீ
என்னோடு தான் இருக்கிறாய்
என்று நினைத்தாலே போதும்
என் பாலைவனக் காடும்
வண்ண மலைக் காடு போல் ஆகும் இரவே இல்லா ஓர்
விடியல் நீளும் கண்ணை
கனவுகள் கொள்ளையடிக்கும்
நிலவும் என்னை பார்த்து
கண்ணடிக்கும்
உன்னை நினைத்தாலே
போதும் என் வாழ்வே
புதிதாய் மாறும்
நான் பிறவி எடுத்ததே
உன்னை நினைத்தே
வாழ்ந்திடத்தானே....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Jul-18, 8:37 pm)
Tanglish : nee illaa neratthil
பார்வை : 112

மேலே