தேவதை அசைந்து வந்தாள்
கண்களிலே கயலிரெண்டை ஓடவிட்டு
கைவிரலில் வெண்டைக்காய் வசைக்கின்றாள்
வண்ணமான பூங்கொடிபோல் தானசைந்து
வஞ்சிமுல்லை நறுமணத்தால் வதைக்கின்றாள்
பண்ணுக்கு இசைகொடுக்கும் இழைகள்போல்
பைங்கிளியாள் செவ்விதளால் இசைக்கின்றாள்
எண்ணமதைச் சிதறவிடும் தன்னுடலால்
என்மனதை தன்திசையில் அசைக்கின்றாள்
அஷ்ரப் அலி