அவள் கண்கள்
குழந்தை கண்ணன் மண்ணுண்டான்
தாய் யசோதை அதைக்கண்டாள் அலறி
குழந்தையை வாரி அணைத்து , என்ன
செய்துவிட்டாய் குழந்தாய் , வாய்திற
என்றால், அங்கு அவள் வெறும் தின்ன
மண்ணைக் காணவில்லை, லோகமனைத்தும்
ஏன், தன்னையும் ,ஆயர்ப்பாடியையும் கூட
சூரிய, சந்திரர்களுடன் கண்டாள்......
பெண்ணே, அவன் கண்ணன், மாமாயன்
அவன் படைத்த உந்தன் கண்களில்
நான் காண்பது , அதிலும் உந்தன்
கண்களின் அழகே,லோகத்து
அத்தனை பெண்களின் கண்கள்
அழகின் சாரமல்லவோ காண்கின்றேன்
நான் உந்தன் அந்த விரி தாமரை கண்களில்
இது என்ன மாயம் இதுவும் அவன் மாயமே
அல்லவா பெண்ணே என்னவளே