காதல்
காதல் மூன்றெழுத்து மந்திரம்
திறந்த கண்களிலும் கனவுகாணும் சுகம் தந்து
உலகமே தன் பாதையில் சுற்றாது சுழலும் உணர்வை தருகிறது
எதை தின்றாலும் வராத திருப்தி
என்னவளை நினைத்தவுடன் நிறைவைடைகிறது
எங்கோ ஒழிக்கும் திரையிசை பாடல் நமக்கே எழுதிய வரிகளாய்
நம்வாயினுள் முணுமுணுத்து போகும்
தேடாத தனிமை என்னவளை / என்னவனை நினைக்க தேடிப்போகும்
கண்களின் இமைகள் முடிந்தமட்டும் விரிந்து தேடுகிறது
என்னவளின் வருகைக்காய் அவள் வரும் பாதையில்
நிமிடங்களை வெறுக்கிறேன் என்னிடமிருந்து அவள் நகரும் தருணங்களில்
காதல் என்னுள் என் உணர்வு எத்துணை மாற்றங்கள் தந்து போகிறது