யாவும் நீயே

துடிக்கின்ற இதய துடிப்பில்...
நீ.........!!
பேசாத தனிமையில்....
மௌனமாய்.....
நீ.........!!
பேசநினைத்த
வார்த்தைகளில்....
நீ.........!!
கண்மூடிய இரவுகளில்....
கனவாக....
நீ...........!!
விழித்தெழும் காலை
பொழுதுகளில்
பிரம்மையாய்...
நீ.........!!
விழி பார்க்கும் திசை யாவும்....
நீ.........!!
ஊற்று நீரை போல்
பெருகி வரும் கண்ணீர் துளிகளில்...
நீ.........!!
தேடலில்
நீ..........!!
தொட்டும்
தொடாமலும்....
தவழ்ந்து செல்லும்
காற்றிலும்..
நீ........!!
நினைவுகளில்
நீ........!!
முகம் பார்க்கையில்
கண்ணாடி பிம்பமாய்...
நீ........!!
விரல் தீண்டிடும் போது மட்டும்...
காணாமல் போனாயே.........
நீ... நீ....நீ......

எழுதியவர் : லீலா லோகிசௌமி (24-Jul-18, 4:26 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
Tanglish : yaavum neeye
பார்வை : 2175

மேலே