உயிர் தேடும் சுவாசம்

உன் விழியோடு மொழிபேச
ஆயிரம் கனவுகள் உண்டு என்னில்....
எங்கனம் நீங்கேன் உன் நிழலை
அன்பென்ற முகவரிக்கு என் வாழ்க்கையில்
அர்த்தம் தந்த உறவல்லவா நீ........
எங்கனம் மறப்பேனடி இந்நினைவிற்கான என் கனவினை
உன் அனபென்ற முகவரிக்குள் எந்நாட்கள் என்றும் முடிசூட்டிய ராணியே இம்மண்ணில்.......
என் வாழ்நாளின் மிகப்பெரிய பேராசை என்னென்று நீ அறவாயா
உன் அன்பின் அரண்மனைக்கு
என்றும் நான் ராணியாகவேண்டும்.........
இம்மண்ணில் பதித்த முதல் சுவாசம் முதல்
இறுதி சுவாசம் வரை
உன் நேசம் என் உயிர் தேடும் சுவாசம்..............

எழுதியவர் : அன்பு (24-Jul-18, 9:19 pm)
சேர்த்தது : Yuvatha
பார்வை : 283

மேலே