என்ன சத்தம் இந்த நேரம்

என்ன சத்தம் இந்த நேரம்

ஏழைக்கிளி ஒன்னு
கூவும் சத்தமோ

என்ன சத்தம் இந்த நேரம்
தூரமாக போகும் இரயிலின்
சத்தமோ

என்ன சத்தம் இந்த நேரம்

என் எண்ணத்தின்
இரைச்சலோ

என்ன சத்தம் இந்த நேரம்

என்னவள் பாடி முடித்த
பாடலின் இறுதி வரியின்
மீதமிருந்த ராகமோ

என்ன சத்தம் இந்த நேரம்

ஆழ்கடலின் உள்ளிருந்து
எழும் ஓசையோ

என்ன சத்தம் இந்த நேரம்

என் இதயம் அவளை எண்ணி
கிறங்கிக் கொண்டிருக்கும்
வேளையில்...!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (24-Jul-18, 9:03 pm)
பார்வை : 75

மேலே