பகலில் வந்த நிலவு

ஓடும் மின்சார ரயில்
குலுக்கிய குலுக்கில்
சற்றே அசந்து
தூங்கிவிட்டேன் என்னையும்
அறியாமல் நான்,
ஏதோ ஒரு வெளிச்சம்
கண்ணில் மின்னலென விழ
விழித்துக்கொண்டேன் நான்,
பகலின்னும் கழியவில்லை
இதென்ன என்முன் சந்திரோதயம் ,
என்று அரைத்தூக்கத்தில்
விழித்த நான்..................
இப்போது கண்கசக்கி
முழுவதுமாய் விழிப்பில்............!
என்னெதிரே அவள் முகம்,
நிலவென அவள்,
இவள்தான் நான் தேடும்
அந்த தேவதையோ என்று நினைக்க
அடுத்த ரயில் நிலையம் வந்தது
அவள் காணவில்லை ..............
முகிலுக்குப்பின்னே ஒளிந்துகொண்டதோ
முழு நிலவு , மீண்டும் நான் காப்பது எப்போது?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Jul-18, 9:44 am)
பார்வை : 104

மேலே