வெற்றியின் நோக்கம்
வெற்றியின் நோக்கம் ...
வெறியில் கிடைத்த வெற்றியும்
வெற்றியில் கிடைத்த களிப்பும்
காண்போரை சுண்டி இழுக்கும் விசையும்
போட்டியின் சாராம்சம் எனில் ...
நோக்கம் என்பது களிப்பையும்
காண்போரின் கவனத்தையும் கொண்டதாகிறது ...
இயற்கை நெறிமுறையை பின்பற்றி
இசைந்து இருந்து ஈதலோடு வாழ்ந்து
அடுத்த தலைமுறையின் வாழ்க்கை பாடமாகி
போட்டியில்லாத வாழ்வில் வெற்றியாகிய வாழ்வை
வாழ தூண்டும் உத்வேகம் நோக்கமாக இருந்து இருந்தால் ...
நம் வாழ்க்கையை வாழ்த்திருப்போம்....