கண்களின் மொழி

உணர்வுகள் வெளிக்கொணரும் உன்னத மொழி
வார்த்தைகளற்று விளக்கம் கூறும் அழகிய மொழி
மனம் செய்யும் தவறுக்கு மன்றாடும் மொழி
அன்பின் ஆழத்தை உணர்த்தும் அற்புத மொழி
ஆற்றாமையோ ஆனந்தமோ
அச்சமோ ஆக்ரோசமோ
தன்னிலை மறக்க செய்து
தவிப்பை குறைக்கும் தன்னலமற்ற மொழி
தெரிந்த விடைக்கு வலியாக வரும்
தெரியாத விடைக்கு பதிலாகவே வரும்
மனதின் வலியை துடைக்க -
விழிகளின் வழியே பாதை அமைக்கும்
கண்ணீர் எனும் கண்களின் மொழி