கேள்வியும் பதிலுமாய்
மழலையின் மொழி அழகு
மழலையின் விழி அழகு
மழலையின் கொஞ்சும் மொழி அழகு
மழலை சொல்லும் அம்மா அழகு
மழலையின் திக்கும் தா தா அழகு
மழலை மொழியெல்லாம் அழகே
ரசித்து ருசித்துதனித்து நாம் கேட்ட
ஒவ்வொரு எழுத்தின் ஓசையும்
வார்தைகளாக்கி சொல்லிப்பின்
முல்லைபல்லோடு சிரிக்கும் மழலையின்
முத்துச் சிரிப்பும் அழகு
விழி இரண்டையும் உருட்டி
கேட்கும் சின்னஞ்சிறு
மழலையின் கேள்விகள் அழகு
வளர்ந்தும் அக்கேள்விதனுக்கு
விடையற்று நாம் விழிப்பது அழகு
விடை தெரியாதென
சொல்ல வெட்கப்பட்டு
சமாளித்தாற்போல
எதோ ஒரு விடையென
சின்னதாய் நாம் சொல்லும்
சிறு பொய்யும் அழகு
நம் பதிலில் குழந்தை
அம்பெடுத்து மறு கேள்வி
மீண்டும் புனைவைதும் அழகு
குழந்தையின் கேள்விகளில்
நம்மறிவு தோற்று
நிற்பதுவும் ஒரு அழகு
இறுதியில் போதுண்டா சாமி
நீயும் இந்த கேள்விகளும்
என்று தப்பித்து நாம் ஓடுவதும்
ஒரு அழகு
என்ன அழகா பேசுகிறது பார்
என்று புல்லரித்துப் போன
புளங்காகிதம் அடைந்த
பெற்றோர்
என்ன பேச்சு பேசுகிறான் பாரு
கொஞ்சம் நேரம் வாயை மூடு
என்று சொல்லும் காலமும்
வந்து நிற்கிறது
விடை தெரியா குழந்தையின்
கேள்விகள் தொடர்கதையாகவே
நீள்கிறது
வாயை மூடு என்றெந்த
அணை அதற்கு எதற்கு
பாயும் நீரோட்டமாய்
பாயட்டுமே சிந்தனை
சார்லென நனைந்திடுவோம்
கேள்வியும் பதிலுமாய்
நீளும் பொழுதுகள் அழகு
குழந்தையின் கண் நுழைந்து
உன்னுலகில் புது உலகம்
காண்பது ஒரு அழகு
அப்படியான ஒரு உலகில்
அழகிய பொழுதுதனில்
எழுதிய கவி இது