நித்திலமே!!!🌸
நித்திலமே!
ஏனடி
என்னை
நித்திரையிலும்
கொல்வது உந்தன்
கண்ணடி
பத்திரமாய்
என் இதயம்
அது உன்னிடத்தில்
உள்ளதா சொல்லடி
காத்திருந்த நேரத்திலே
நீ என் கடிகாரம் முழுங்கிய
பெண்ணடி
பூத்திருந்த பூவிலே
நீ தேனெடுக்கும்
வண்டடி
எட்டி நின்றே நீ என்னை
தின்றாயே ஏனடி
காரணம் சொல்கிறேன்
கேளடி
உனக்கும் என்மேல்
காதலடி
கோபுரம் இல்லா கோவிலோ
உன் காலடி தடம் தானடி.....!!!