வெற்றி

(* யாழினி வளன் அவர்கள் கவிதை 'வெற்றி.யைப் படித்தபின்
எனக்கு இப்படி தோன்றியது ..........இதோ கவிதை )

போரில் மன்னனுக்கு வெற்றி
விளையாட்டில் ஒருவனுக்கு வெற்றி
படிப்பில், பாட்டில் என்று
நீள்கிறது வெற்றியின் பட்டியல்
இதில் வெற்றி ஒருவனுக்கு
தோல்வி ஒருவனுக்கு
இப்படி இந்த வெற்றி தோல்வி
ஒருவரை சார்ந்தது ஒருவரை மட்டுமே
பொது உடமை ஆகாது ஒரு போதும்

உனக்கு வெற்றி நீ உன் அகத்தை
உன் காயத்திலிருந்து வெளியேற்றியபோது
அப்போது வெற்றி தோல்வி இரண்டும் ஒன்றே உனக்கு
அப்போது நீ பலர் உள்ளத்தில் ............
உன் வெற்றி பொது உடமை ஆகிறதே
இதுவே வெற்றி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Jul-18, 8:07 am)
Tanglish : vettri
பார்வை : 103

மேலே