தூரம் அதிகமில்லை

கால் நடையாய் நடந்து கடந்தோம் தூரத்தை
கால்நடைகளை வாகனமாக்கி இடம் விட்டு இடம் சென்றோம்
மிதி வண்டிகளை பயன் படுத்தினோம்
அறிவியல் வளர்ச்சியால் பல விந்தைகள் செய்தோம்
இரு சக்கர வாகனம் நன்கு சக்கர வாகனம் கப்பல்
புகை வண்டி விமானம் இப்படி போக்குவரத்தில்
மாற்றம் கண்டோம்
நீரிலும் நிலத்திலும் ஆகாயத்திலும் பயணம் செய்தோம்
கைக்கு எட்டும் தூரத்தில் வானம் என்று கவி பாடினோம்
கண்டம் விட்டு கண்டம் சென்றோம்
கடல் அளவையும் கடுக்காக்கி
விரல் நுணியில் வைத்தோம்
கிரகம் விட்டு கிரகம் செல்வோம்
நமது கால் தடங்களை பதிப்போம்
தூரம் அதிகமில்லை
- கோவை உதயன்