அறியாமையில் நீங்களும், நானும்

இங்கு கடமை செய்வதற்கு குறுக்கே நிற்பது கடவுள் பதவியில் மனிதர்களால் அமர்த்தப்பட்ட கடவுளில் இருந்து உயர் மட்டப் பதவியாளர்கள் வரை.
கோவில் சிறு லஞ்சமென்றால் கற்பூரம் கொளுத்துவது.
அடையாள லஞ்சம் தலையை மழித்து மொட்டையடித்துக் கொள்வது.
உயர்மட்ட லஞ்சம் உயிர்பலியிடுவது.
இங்கு கோயில் தொடங்கி எங்கும் லஞ்சம் பரவ நீங்களும் நானும் தான் காரணம்.
செய்யும் வேலைக்கும் கூலி கிடைக்கும் போது அந்த வேலையைச் செய்ய பிச்சை கேட்டு கைகளை நீட்டுகிற மனநிலையை விரட்ட முடியாமல் சும்மா ஆண்ட பரம்பரையென்று தெருவில் நின்று கூவுவது எவ்வளவ அறியாமையில் நாம் இருக்கிறோம் என்பதை காட்டுகிறது.

பிறவிக்குணம் என்று எதுவும் இல்லை.
திணிக்கப்பட்ட குணங்களில் தான் நான் எனது என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறோம்.
பிறரை பகுத்துப் பார்க்கும் மனதிற்கு தன்னை பகுத்துப் பார்க்க தெரியவில்லை.
மகான்களும் ஞானிகளும் வரம் வாங்கி பிறக்கவில்லை.
சாமானிய மக்களைப் போலவே பிறந்தார்கள்.
புரியாத மாக்களே நீங்கள் தான் இந்த பூமியின் சாபம்.
சாத்தான் பெயரில் அட்டூழியங்களை அரங்கேற்றும் போதகர்களே! உங்கள் நாக்குகள் அறியாமையை வளர்ப்பதால் அவற்றை வெட்டி எறியுங்கள்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (27-Jul-18, 4:29 pm)
பார்வை : 1898

மேலே