எங்கிருந்தோ வந்தவள்
எங்கிருந்தோ வந்தவள் அவள்
என்னை எடுத்துச் சென்றால்
கம்பங்கூழாய் என்னை
குடித்து முடித்தால்
அவளின் உதட்டில்
ஒட்டிய என் மிச்ச
மீதியையும்
நாவால் எச்சில்
செய்து உள்ளிழுத்து
முழுங்கிவிட்டாள் அவள்
ஓரக்கண் அசைவில்
ஓராயிரம் ஜாடை காட்டியே.....!!!