நீயே
அன்பே என்
அன்பும் நீயே அழகும் நீயே
ஆனந்தமும் நீயே ஆத்மாவும் நீய
இன்பமும் நீயே இருதயமும் நீயே
ஈர்ப்பும் நீயே ஈரமும் நீயே
உயிரும் நீயே உறவும் நீயே
ஊக்கமும் நீயே உடலும் நீயே
என்னுள் நீயே எதிலும் நீயே
ஏக்கமும் நீயே ஏகாந்தமும் நீயே
ஐயமும் நீயே ஐம்புலனும் நீயே
ஒயிலும் நீயே ஒன்றிணைந்ததும் நீயே
ஓவியமும் நீயே ஓரக்கண்ணும் நீயே
ஔடதமும் நீயே ஔவியமும் நீயே
காதலும் நீயே காட்சியும் நீயே
கண்களும் நீயே கவிதையும் நீயே
வட்டமுகமும் நீயே வாழ்க்கையும் நீயே
சுகமும் நீயே சுவையும் நீயே
பண்பும் நீயே பாசமும் நீயே
தமிழும் நீயே தலைவியும் நீயே
தாய்மொழியும் நீயே தாய்வழியும் நீயே
திங்களும் நீயே திவ்வியமும் நீயே
தீண்டலும் நீயே தீண்டாமையும் நீயே
துடிப்பும் நீயே துவக்கமும் நீயே
தூரமும் நீயே தூரலும் நீயே
தென்றலும் நீயே தென்திசையும் நீயே
தேவதையும் நீயே தேன்மொழியும் நீயே
தைரியமும் நீயே தையலிடுவதும் நீயே
எழிலும் நீயே என்னவளும் நீயே
வெண்ணிலவும் நீயே "வெள்ளி நிலவும் நீயே
பிறந்தவளும் நீயே
பிறந்தநாள் காண்பவளும் நீயே
மலரும் நீயே
மணம்கொண்டும் நீயே
மலர்ந்தவளும் நீயே....
மணம் கொண்டு மலர்ந்த மலரே
உன் மனம்போல் என்றும்
உன்வாழ்வும் இன்பம்கண்டு
என்றும் மணம்வீச
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
♡♥♡♥♡♥♡♥♡♥♡♥♡♥♡♥
....................................................................