ஆசை வச்சேன் மச்சானே
===========================
ஆளான தாமரை
அத்தான் உன் பூமழ
ஆறேழு மாசமா உன்னால தூங்கல .....
௦௦௦
கூரான மீசையில் குத்தாம குத்துற
கூழாக என்னத்தான் குடிக்க நீயும் மறுக்கிற
பாலாக கொதிக்குது பருவ நெனப்பு வதைக்குது
பார்க்காம போற மச்சானே ...
பலநாளா ஆச வச்சேனே
௦௦௦
தேரோடும் வீதியில செலையாக நிக்கிறேன்
திருவிழா எப்பத்தான் என் தெய்வமே சொல்லிப்புடு
நாரோடு பூமுடிச்சி மால ஒன்னு போட்டுவிடு
பார்க்காம போற மச்சானே ...
பலநாளா ஆச வச்சேனே ...