இயற்கையோடு இணைந்து வாழ்ந்திடலாம்

செடி,கொடி,மங்களுக்கும்
ஜீவனுண்டு உணர்வுகளுண்டு
இதை நாம் தெரிந்தும்
தெரியாதுபோல் இருக்கிறோமா
இலை இதை இன்னும் அறியாமலேயே
இருக்கிறோமா என்றுதான் எண்ண
தோன்றுகிறது, சில அநியாய
செயல்களைப் பார்க்கும்போது,
ஆண்டாண்டுகளாய் சாலையோரத்தில்
நெடுகிலும் வானளாவி நின்ற
நிழல் தரும் நெடுமரங்கள், நிழலுடன்
உடலுக்கு நலம் தம் காய்,கனிகளும் தந்திடும்
ஒரு நாள் திடீரென ஒரு ராணுவ தாக்குதல்போல்
சில மனிதர்கள் சிலமணி நேரத்தில்
வேரோடு நிலைகுலைய செய்தனர்
இம்மாமரங்களை , ஏனென்று கேட்க,
நெடுஞசாலை விஸ்தரிக்க இது அவசியமாம்;
இப்படியே மலையின் பகுதியில்
காடுகள் அழிக்கப்பட்டன, ஏனென்று கேட்க
ஏதோ பெரிய தொழில்நுட்பசாலை அங்கு
வரப்போவதாக சொன்னார்கள் ............
அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.....

முப்போகம்தந்த வயல்வெளிகள்
காணாமல் போயே போயின
அங்கு வானளாவும் மாட மாளிகைகளும்
அடுக்குமாடி குடியிருப்புகளுமாய்
நகரம் எல்லையில் விஸ்தரிப்பு........

காடழிந்தது,வயல்கள் அழிய
நிழல்தரும் மான்கள் அழிய
மழைவேண்டி மக்கள் நிற்க
வானில் மேகமில்லை ,மேகமிருக்க
அது நீரில்லாமல் வற்றிருக்க
இயற்கைமீது மனிதன் செய்த
அத்து மீறல்களுக்கு இயற்கை
மனிதனுக்கு தரும் பாடம்
பூமியில் வரட்சி, பஞ்சம்
சூறாவளி...........இவையெல்லாம்
மனிதன் பாடம் கற்றானா.............
இல்லவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்
இதோ இன்னும் நீர்நிலைகளை துள்ளடைக்கிறான்
வீடுகள் கட்ட நிலம் வேண்டி,
ஆற்று நீரை மாசுபடுத்துகிறான்
மன்னீரையும் ..............ஆகாயத்தையும் சேர்த்து
இயற்கையை மாசுபடுத்தி இவனே
தனுக்கு அழிவு சேர்த்துக்கொள்கிறானே .
அறிந்தும் அறியாமல் இருக்கின்றானா
இல்லை, இது இவன் அறியாமையா ............

வேதம் சொல்கிறது, செடிகளில்
இலைகளை பறிக்கும்போது
சில மந்திரங்கள் சொல்லி செடியருகே
செடியின் அனுமதியோடு மூலிகை
இலைகளை பறிக்க வேண்டுமென்று,
துளசி,வில்வம் போன்ற செடிகளுக்கு
இது ஏன் என்றால் செடி,கொடி,மரங்களுக்கு
ஜீவன் உண்டு ...............
நம்முடலில் நகங்களை வெட்டி சீர்படுத்தும்
பொது தவறாக வெட்டினால் ..........தெரியும்
நகமும் சதையோடு சேந்து உயிர் கொண்டது என்பது
அதுபோலத்தான் தாவரங்களும் .................

அவற்றின் இலையை பரிக்கும்போதோ,
காய், கனிகளை கொய்யும்போதோ, கிளைகளை
வெட்டும்போதோ, மெதுவாக நோகாது செய்தல் வேண்டும்

இயற்கையை புரிந்துகொள்வோம்
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்
நம் வாழ்வு வளம்பெற

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Jul-18, 11:30 am)
பார்வை : 1280

மேலே