மகளின் கலையாத கனவு
உன்னைக் கருவில்
சுமந்த போது
வலியாய் நீ
தோன்றவில்லை!
கவிதை வரியாய்
தோன்றினாய்!
உன் இரு விழியின்
ஒரு துளி கண்ணீரால்
என் உலகமே
நின்றுவிடும்!
உன் ஒற்றைப் புன்னகை
என் இதயத்தை எளிதாய்
வென்றுவிடும்!
உன் கனவுகளை கலைக்காமல்
ஒவ்வொன்றாய் நனவாக்கவே
இறைவன் உனை
எனக்களித்தான்!
உன் ஆசைகளை
நான் அலட்சியப்படுத்துகையில்
ஆண்டவன் எனைப்
புறக்கணிப்பான்!