செல்ல மகனுக்கு

அமுதூட்ட அருகிலில்லை
தாலாட்ட நானில்லை
உணவூட்ட உடனில்லை!

வேலைக்குச் செல்லும்போது
விடமாட்டேன் என்றபோதும்
விடைபெறுகிறேன்
உன் கண்ணீரோடு
காலையில்!

வழிமேல் விழி வைத்து
ஏக்கத்துடன் எதிர்நோக்கும்
உனை வாரியணைக்க
விரைந்து வருகிறேன்
மாலையில்!

உன் மழலை மொழியில்
அம்மா என்று
நீ அழைக்கும் போது
காற்றில் பறந்துவிடுகிறது
என் களைப்பெல்லாம்!

எழுதியவர் : வெ.சுபிதா (30-Jul-18, 12:10 pm)
சேர்த்தது : SUBITHA V
Tanglish : sella maganukku
பார்வை : 229

மேலே