தாரகை
தாரகையே
என்றோ வரபோகும் உனக்கு
இன்றே எழுதுகிறேன்
அன்பென்ற வார்த்தைக்கு
மரபு நீ யாக இருக்க விரும்புகிறைன்
உனக்கும் எனக்கும்
இன்று முதலிரவாம்
நமக்கு மட்டும் தான்
தெரியும் முதலிரவிற்கான
ஒத்திகை என்று
கோபம் வந்தால்
சமையலறைக்கு வா
உனக்கு கோபம் குறையும்
ஏனெனில் அங்கு இருப்பவை எல்லாம்
உன் தாயின் சீதனம் உனக்கு உடைக்க
மணம் வருமோ
இன்னும் கோபம் இருப்பின்
சொல்லிவிட்டு போ...
என் மாமியார் வீட்டுக்கு
ஆனால் மாலையே
வீடு திரும்பு
இரவு கட்டிலில்
சமாதானத்தை சத்தம்மில்லாமல்
பேசி முடிப்போம்
பிள்ளையை பார்த்து கொள்ள
சண்டை வேண்டாம்
மாத வருமான கணக்கில்
சந்தேகம் வேண்டாம்
கட்டிய தாலி கூட கருத்து போகலாம்
இணைந்த மனங்கள் வெறுத்து போகாமல்
வாழலாம்
காத்திருக்கிறேன்....காத்திருக்கிறேன்