பூமரமாய் செழித்தோங்கும் வாழ்முழுதும்

பூமரமாய் செழித்தோங்கும் வாழ்முழுதும்
*****************************************************************

சோமரசந் தனையொதுக்கி சோகவாசம் நல்தவிர்க்க
பாமரரும் தேர்வாரே பண்டிதராய் பல்கலையில் --உடன்
பூமரமாய் செழித்தோங்கும் நேர்ந்திட்ட வாழ்முழுதும்
சாமரமே வீசிநிற்பர் இயற்கையும் இறையவரும் !

( இன்று காலை திருச்சியில் ஒரு கல்லூரிவாசலில் போதையில்
தடுமாறி செய்வதறியாத நிலையிலிருந்த மாணவனைப் பார்த்த பின்னர் என்னுள்
எழுந்த தாக்கமே இப்புனைவு )

எழுதியவர் : சக்கரைவாசன் (2-Aug-18, 8:20 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 100

மேலே