கண்மணியே...
காலை பனியே அழகிய கதிரவன் ஒளியே
கண்மணி உன்னிடம் பொழிவதை கண்டேன்
ஓலை சுவடே எனது தூரிகை நுனியே
கவிதையே உன்னை நான் எழுதிட கண்டேன்
சூடும் மலரின் வாசம் நுகர்வது போலே
உன் இருதயம் சென்று நான் நுகர்வதறியாதே
காணும் இடம் யாவும் ஞாயிறு போலே
என் கண்களை மூடியும் முகம் மறையாதே
என் உடல் மட்டும் உயிரெங்கோ இடம்பெயர்ந்ததடி..
என் நிழல் மட்டும் நிஜமெங்கோ பரிபோனதடி..
என் மனம்பாதி உயிர்பாதி துரும்பாகுதடி
என் விழியிரண்டும் உனைகாண அலைந்தோடுதடி.....
நிலவில் வாழ்ந்திடும்... புண்ணகை மலரே..
சித்திரமழகே... சிலைவடிவே வா....
வருடும் காற்றிலே... மூங்கில் ராகமே..
விழிகள் சிந்திடும் மௌனங்களே வா...
கண்களினாலே காயம் தருகின்ற போதும்
உன்னிடம் கிடைத்த காயம் மனம் நொருங்காதே
என்னை மறந்து நீயும் பிரிகின்ற போதும்
உன்னை மறந்து வேரொரு முகமறியதே..
மாலை பொழுதே அழகிய சந்திரன் ஒளியே..
அன்பெனும் பொருளினை உன்னிடம் கண்டேன்..
விண்ணில் சூழ்ந்த அழகிய வின்மீன் ஒளியே..
அடி கனவிலும் அரக்கியே உன்முகம் கண்டேன்...