என்ன முல்க் ஆக்கிட்டாங்க அண்ணே

ஏன்டா நெட்டப் பையா வடக்க வேலையில சேந்த. ஆறு மாசங் கழிச்சு விடுப்பில வந்திருக்க. ஏன் கொஞ்சம் சோகமா இருக்கிற?
😊😊😊😊😊
அண்ணே, எம் பேரு என்ன அண்ணே.
😊😊😊😊
அடி செருப்பாலே. வடக்க போயிட்டு வந்து உம் பேருகூட உனக்கு மறந்து போச்சா?
😊😊😊😊😊
எம் பேரே மாறிப் போச்சு அண்ணே. மாறிப் போச்சு!
😊😊😊😊
என்னடா நெட்டையா சொல்லற?
😊😊😊😊😊
நான் நடந்ததைச் சொல்லறேன். எம் பேரச் சொல்லுங்கண்ணே.
😊😊😊😊
உம் மூஞ்சிக்கும் மொகறைக்கும் உனக்கு 'அரசன்'-னு பேரு.
😊😊😊😊😊
அந்தப் பேருதான் அண்ணே வடக்க பிரச்சனையாகிப் போச்சு. நான் வேலை பாக்கிற நிறுவனத்தில எம் பேர இந்திக்காரங்களால உச்சரிக்க முடியல. என்ன எல்லாரும் 'அர்ஸ், அர்ஸ்'னு கூப்படறாங்க அண்ணே. எனக்கு அந்த அர்ஸ் பிடிக்கல. 'அரசன்' ங்கற தமிழ்ச் சொல்லுக்கு இணையான இந்திப் பேரையே வச்சுக் கூப்புடுங்கனு சொன்னேன்.
😊😊😊😊😊
இந்திக்காரங்க என்னடா பண்ணுனாங்க.
😊😊😊😊😊
எம் பேர 'முல்க்'னு மாத்தி அரசிதழ்ல பதிவு பண்ணச் சொன்னாங்க. நாங் காலம் முழுவதும் அங்க வேலை பாத்தாகணும். நல்ல சம்பளம். இலவசக் குடியிருப்பு. அலுவலகத்து அழைச்சிட்டு போக வீட்டுக்கே காரு வருது. இதுக்கு நன்றி கடனாகவும் தற்காலத் தமிழர் நாகரிகத்தின் படியும் நான் 'முல்க்' ஆகிட்டேன் அண்ணே.
😊😊😊😊
நீ 'முலக்' ஆனா என்ன? முழுக்கான எனக்கென்ன? எனக்கு நீ நெட்டையன்தான்டா. போடா நெட்டப் பயலே.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
திரைத் தமிழைத் தவிர்ப்பது தமிழுணர்வு உள்ளவர்களின் கடமை.

எழுதியவர் : மலர் (4-Aug-18, 4:44 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 107

மேலே