ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே - ஹிந்தோளம்

மணிப்பூர் மாமியார் [ 1978 ] என்ற திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன் - S.P.ஷைலஜா ஹிந்தோளம் ராகத்தில் பாடிய ஒரு அருமையான பாடல் ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

ஆண்:

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே
ஆசை காதலிலே...

பெண்:

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே
ஆசை காதலிலே

ஆண்:

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

சரணம் 1

ஆண்: மான்கள் தேடும் பூவை அவளோ தேவி சகுந்தலையோ

பெண் : மோக வீணை தன்னை மீட்டி பாடும் பாவலனோ

ஆண்: தேவலோக இந்திரசபையில் ஆடும் ஊர்வசியோ ஆடும் ஊர்வசியோ

பெண்: ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே

ஆண்: ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

சரணம் - 2

பெண்:

மார்பில் சூடும் சந்தன மலர் போல் மங்கை நான் வரவோ ....
மார்பில் சூடும் சந்தன மலர் போல் மங்கை நான் வரவோ

ஆண்:

போதை ஊட்டும் திராட்சை மதுவோ தேகம் பூச்சரமோ

பெண்:

பார்வை யாவும் காதல் நோயை தீர்க்கும் மந்திரமோ ...
தீர்க்கும் மந்திரமோ ...

ஆண்:

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே ...

பெண்:

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே

இருவரும்: ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Aug-18, 9:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 612

சிறந்த கட்டுரைகள்

மேலே