திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன் - காம்போஜி

இப்பாடலை சென்ற செவ்வாய்க் கிழமை 31.07.2018 ல் ஃபார்ச்சூன் பாண்டியன் ஓட்டலில் ‘ராகப்ரியா’ சார்பில் 49 வது ஆண்டு விழாவில் திருமதி.மஹதி முக்கியப் பாடலாக எடுத்து, விரிவாகவும், அருமையாகவும் பாடினார்.

பல்லவி:

திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்
தேவாதி தேவ நின் (திருவடி)

அநுபல்லவி:
மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படுத்த வேண்டாம் பொன்னம்பலவா நின் (திருவடி)

சரணம்:

எடுத்த ஜனனம் கணக்கெடுக்கத் தொலையாது-
இரங்கி மகிழ்ந்து தேவரீர் வேணுமென்று
கொடுத்த மானிட ஜன்மம் வீணாகி போகுதென்
குறை தீர்த்த பாடுமில்லையே (திருவடி)

அடுத்து வந்த என்னை தள்ளலாகாது
அர-ஹராவென்று சொன்னாலும் போதாதோ
தடுத்து வந்தருள சமயம் கோபாலக்ருஷ்ணன்
சந்ததம் பணிந்து புகழ்ந்து போற்றும் (திருவடி)

MS Subbulakshmi-Thiruvadi-charanam-Kambhoji-Gopalakrishna Bharati என்று யுட்யூபில் பதிந்து MS.சுப்புலட்சுமி பாடுவதைக் கேட்கலாம்.

Thiruvadi charanam endringu by Smt. Aruna Sairam at Margazhi Maha Utsavam - Ragamalika TV 2015 என்று யுட்யூபில் பதிந்து அருணா சாயிராம் பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Aug-18, 9:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 430

சிறந்த கட்டுரைகள்

மேலே