ராஜசேகரா என்மேல் மோடி செய்யலாகுமா – ஹிந்தோளம்

நாகேஸ்வர ராவ், அஞ்சலிதேவி நடித்து 1955 ல் வெளிவந்த அனார்கலி திரைப்படத்தில் கண்டசாலா, ஜிக்கி ஹிந்தோள ராகத்தில் பாடிய ஒரு அருமையான பாடல் ‘ராஜசேகரா என்மேல் மோடி செய்யலாகுமா’.

மதன மனோகர சுந்தர நாரி
மதுர இதழ் மலர் அழகினைக் கோரி
மயங்கிடுவாய் எழில் ராஜவசீகரி
நாட்ய சிங்காரி
அனார்கலி அனார்கலி அனார்கலி.
ஆ..ஆ...ஆ...

ராஜசேகரா என் மேல்
மோடி செய்யலாகுமா
ராஜதந்த்ரி நீயடா
ராஜசேகரா என் மேல்
மோடி செய்யலாகுமா
ராஜதந்த்ரி நீயடா
ஆ..ஆ..ஆ..ஆ..
ராஜசேகரா..
ஆ..ஆ...ஆ,,
ராஜசேகரா என் மேல்
மோடி செய்யலாகுமா
ராஜதந்த்ரி நீயடா
ராஜசேகரா
.
மனதில் உருவம் காணுதே
மமதை பார்வை மோதுதே
மனதில் உருவம் காணுதே
மமதை பார்வை மோதுதே
மதுவில் மலரைப் பாரடா
மௌனமாகுமா?
.
ராஜசேகரா என் மேல்
மோடி செய்யலாகுமா
ராஜதந்த்ரி நீயடா
.
காதலாலே ஏங்குதே
கவர்ந்த கண்கள் தேடுதே
காதலாலே ஏங்குதே
கவர்ந்த கண்கள் தேடுதே
ஆவல் தீரக் கேளடா
வீணில் ஜாலமேனடா
ஆவல் தீரக் கேளடா
வீணில் ஜாலமேனடா
அருகில் வாடா அருகில் வாடா
ஆசை ராஜா.

RAAJASEYGHKARAA EN MEYL MODI SSKFILM030 GS,JK @ ANAARKKALI என்று யு ட்யூபில் பதிந்து இப்பாடலைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Aug-18, 10:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 254

சிறந்த கட்டுரைகள்

மேலே