வந்தாய் நெஞ்சை நிறைத்தாய்
வந்தாயே காவிரியே வந்தாயே
வாழியே காவிரியே வாழியே
வந்தாயே வந்து எங்கள் நெஞ்சை நிறைத்தாய் தாயே
பிறத்த வீடடில் இருந்து ஓடோடி வருகின்றாய்
எங்கள் வாழ்வு பிளைத்திட
எங்கள் வயிற்று பிணி போக்கிட
ஓடோடி வந்தாய் ஓடோடி வருகின்றாய் உமது குழந்தைகள் வாடி வதங்கியதை
காணமுடியாமல் வந்தாயே
நீ வாழிய வாழியே காவிரியே
உன்னை கண்டவுடன் என்ன பரவசம்
குழந்தையாகிப்போனேனே
ஓடியாடி ஆற்றில் குதித்து சொல்லமுடியாத பேரானந்தம் கண்டேனே!
காவிரியே நீ இல்லாமல்
சோர்வுடன் இருந்தோமே
நீ வந்தவுடன் எந்த சோர்வும் இல்லையே
புதுபொலிவு கொள்கிறதே
நீ பாயும் இடமெல்லாம்
வாழிய காவிரி வாழியே
காய்ந்த வயல்வரப்பெல்லாம் நீ பைய பைய போகையிலே உன்னோடு நானும் வருகிறேன்
நீ வளைந்து நெளிந்து செல்லும் அழகைக் காண
காவிரியே நீ பரந்து விரிந்து தெரிகையிலே கடலை
காண்பதாய் தெரிகிறதே
உன்னை வண்ணவண்ண மலர்களை கொண்டு வரவேற்கிறோம் குடகுமலையை பிறப்பிடமாய் கொண்டவளே
வாழிய வாழியவே
காவிரியே