காதல்

என் கவிக்கு விதை நீ என்பேன்
அதை விதைக்கும் நிலம்
என் இதயம் என்பேன்
அதற்க்கு ஊற்றும் நீர்
உன் நினைவுகள் என்பேன்
உன் புன்னகையே என்
விருச்சகத்தின் பூக்களென்பேன்
உன் இதழ்களே
அதன் கனிகள் என்பேன்
உன்னில் உதிரும் இலைகள்
தங்கம் என்பேன்
விழும் கனிகள்
வைரங்கள் என்பேன்
விழுந்த இரண்டுமே
எனக்கு சொந்தமென்பேன்.......

எழுதியவர் : ராஜேஷ் (6-Aug-18, 6:10 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : kaadhal
பார்வை : 567

மேலே