பரதேசி இவனை மறந்திடு
சின்ன சின்ன ஆசைகளாய் மனதில் சித்திரங்களை வரைந்து வைத்தேனே.
அத்தனையும் அழிய காரணமாய் நீ வந்து ஞானம் தந்தாயே ஞானப் பெண்ணே.
மறைந்திடாத நினைவாய் மறைபொருள் நீ விளக்க, மனத்திரையில் உன் முகம் கண்டே அமைதியடைகிறேன் புத்தனாய் அல்ல.
பித்தனாய்...
சித்தனாய் சிந்தனை செம்மையுற நானும் சிவத்தையே நாட,
புறக்கணிக்க முடியாத புதைபொருளாய் மனதில் உன்னை அடிக்கடி கண்டுபிடிக்கிறேனே.
என்னை மறந்த உனக்கு நான் தெரியாத உனக்கு
நலமான வாழ்க்கை அமைய நானும் அடிக்கடி வேண்டுகிறேனே.
வேண்டுதல் பழித்ததாய் நின் வாழ்வை நீ வாழ உன்னை விட்டு எட்டாத் தொலைவில் நானும் மறைய விரும்புகிறேனே.
உனக்கு தொல்லை என்றெண்ணி என் பெயரை தொலைத்தேனே.
நின் காண வெறுக்கும் பிச்சைக்கார ஏழையாய் நானும் உன்னைக் கடக்கவே காறி உமிழ்ந்த உன் எச்சிலைத் தாங்கிய பூமிக்கே தெரியும் என் மனமதும்.
நலமாய் நீ வாழ என் வேதனை உனக்கு புரியாது போக வெறுப்பை உமிழும் மனதிற்கு நன்றி சொல்லி நானும் மனப்பாரத்தை இவ்வரிகளில் இறக்கி வைக்கிறேனே.
என்னை நினையாதே.
என்னைப் பற்றி பேசாதே.
என்னைப் பார்க்காதே,
என் கண்களை பார்க்க நான் உன்னை அனுமதிக்கமாட்டேன்.
நல்ல ஆடம்பரமாய் நீ வாழ்ந்திடு.
பரதேசி! இவனை மறந்திடு.