கண்ணீரில் கரையும் கண்கள் 555
![](https://eluthu.com/images/loading.gif)
நெஞ்சமே...
நித்தம் பூத்துக்குலுங்கும் மலர்களை
காண நந்தவனம் செல்வேன்...
மலர்களை காட்டிய
என் கண்கள்...
முதல்முறை பாவை
அவளை காட்டியது...
இதயத்திற்கு நித்தம் காண
கட்டளையிட்டது கண்களுக்கு...
அவளை காட்டிய கண்களிடம்
காதல் தூது சொல்லியது இதயம்...
தினம் மலர்ந்து
உதிரும் மலர்களை போல...
என்காதலை சில
நாட்களில் தூக்கி எறிந்தாள்...
சதைகளுக்கு நடுவில் இருக்கும்
இதயம் அமைதியாக அழுகிறது...
அவளை காட்டிய கண்கள்
கண்ணீரில் கரைகிறது தினம் தினம்.....